மேலும் செய்திகள்
'வீடுதோறும் பிரசாரம்' அமைச்சர் மூர்த்தி தகவல்
02-Jul-2025
அரியாங்குப்பம்: கிராம பஞ்சாயத்து அளவிலான நிதி உள்ளடக்க திட்டங்களுக்கான பிரசாரம் துவக்க விழா நடந்தது.மத்திய நிதி அமைச்சகத்தின் மூலம், கிராம பஞ்சாயத்து அளவிலான நிதி உள்ளடக்க திட்டங்களுக்கான மூன்று மாதம் முழு நிறைவு பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது. இந்த பிரசாரம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நடக்கிறது.அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் பிரசாரம் துவக்க விழா நேற்று நடந்தது. துணை கலெக்டர் இஷிதா ரதி துவக்கி வைத்தார். பாஸ்கர் எல்.எம்.ஏ., தலைமை தாங்கி, சிறப்புரை ஆற்றினார். வங்கியில் கணக்கு வைத்தியிருப்பவர்களின் கே.ஒய்.சி.,யை, டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், மாநில அளவிலான வங்கியாளர் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்ரமணியன் உட்பட வங்கி அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
02-Jul-2025