மேலும் செய்திகள்
2 நாள் விபத்துகளில் 200 பேர் பாதிப்பு
10-Nov-2026
புதுச்சேரி: புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் பாரில் ஏற்பட்ட தீவிபத்தில், மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. புதுச்சேரி அண்ணா சாலை ராஜா தியேட்டர் அருகே தனியார் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரின் முதல் மாடியில் இன்று (நவ.,23) காலை 11.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அங்கு இருந்த 5 பேர் அங்கு சூழ்ந்த புகையில் சிக்கி கொண்டனர். தகவலறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையின் அங்கு பரவி இருந்த தீயை அணைக்க துவங்கினர். மேலும் புகை மண்டலத்தில் சிக்கி தவித்த 5 பேரையும் தீவிர போராட்டதிற்கு பின் மீட்டனர். மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் இரண்டு பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் பாரின் முதல் மாடி முற்றிலும் சேதமடைந்துள்ளது. பரபரப்பான அண்ணா சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து பெரியகடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10-Nov-2026