உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கசிவினால் தீ விபத்து; ரூ.4 லட்சம் பொருட்கள் சேதம்

மின் கசிவினால் தீ விபத்து; ரூ.4 லட்சம் பொருட்கள் சேதம்

காரைக்கால்; காரைக்காலில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.காரைக்கால், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ். இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த காரைக்கால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பிரிஜ், டிவி., கட்டில், மெத்தை மற்றும் பீரோவில் வைத்திருந்த குழு பணம் 1 லட்சத்து 20 ஆயிரம் உட்பட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.தீ விபத்து குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தகவல் அறிந்த அமைச்சர் திருமுருகன் பாதிக்கப்பட்ட சுபாஷ் வீட்டிற்கு சென்று நிவாரணம் வழங்கி, ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ