உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் கம்பெனியில் தீ விபத்து: பொருட்கள் சேதம்

தனியார் கம்பெனியில் தீ விபத்து: பொருட்கள் சேதம்

புதுச்சேரி, : மேட்டுப்பாளையம் கமல் போம் கம்பெனியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில் கமல் போம் (பி) லிட் கம்பெனி இயங்கி வருகிறது. சென்னையை சேர்ந்த நஸ்ரிம் ஜவாங்கீர் என்பவர் கம்பெனியை நடத்தி வருகிறார். இங்கு, ேஷாபா, படுக்கை உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படும் போம் தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று மாலை 3:45 மணி அளவில், இந்த போம் கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு துறையின் நிலைய அதிகாரி மனோகர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் சென்று, தீயை அணைத்தனர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போம் பொருட்கள் மற்றும் தயாரிப்பு இயந்திரங்கள் உள்ளிட்டவை முழுதும் எரிந்து சேதமடைந்தன. மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை