உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

புதுச்சேரி : பிறருக்கு தொந்தரவு அளிக்காமல், தீபாவளி பண்டிகையை இனிப்பு வழங்கியும், விளக்குகளை ஏற்றியும் கொண்டாட மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் வலியுறுத்தியுள்ளது. குழும தலைவர் அலுவலக செய்திக்குறிப்பு: தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்தள்ளது. அதன்படி, புதுச்சேரியில் தீபாவளி அன்று காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், கல்விக் கூடங்கள் மற்றும் கோர்ட் வளாகம் சுற்று வட்டாரங்களின் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதால் புகை, நச்சுத்துகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் வெளிப்படுகிறது. இதனால், மூச்சுத்திணறல், கண்கள் மற்றும் பிற உடல் பாகங்களில் காயம், காது கேட்கும் திறன் குறைதல், பார்வைக் குறைபாடு, துாக்கமின்மை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக, முதியோர், கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் பாதிப்புக் குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால், பிறகுக்கு தொந்தரவு மற்றும் துன்பம் அளிக்காமல், தீபாவளி பண்டிகையை இனிப்புகள் மற்றும் விளக்குகளை ஏற்றி கொண்டாட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி