உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அலையில் சிக்கி மீனவர் பலி 

 அலையில் சிக்கி மீனவர் பலி 

புதுச்சேரி: மீன் பிடிக்க சென்ற மீனவர் அலையில் சிக்கி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வைத்திக்குப்பம், சுனாமி குடியிருப்பு சேர்ந்தவர் மூர்த்தி மகன் செந்தில், 43; மீனவர். இவர், நேற்று காலை குருசுக்குப்பம் கடற்கரையில், கருங்கற்கள் கொட்டிய பகுதியில் துாண்டில் மூலம் மீன்பிடிக்க சென்றார். மீன்பிடிக்கும்போது துாண்டில் கற்கலின் நடுவே மாட்டிக்கொண்டது. துாண்டிலை எடுக்க கருங்கற்களுக்கு இடையே இறங்கியபோது, எதிர்பாரத விதமாக செந்தில் அலையில் சிக்கினார். கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்ததை உறுதி செய்தார். புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ