உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீனவர்கள் ஆர்ப்பாட்டம் 

மீனவர்கள் ஆர்ப்பாட்டம் 

புதுச்சேரி: புதுச்சேரி, சுதேசி மில் அருகில் தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் புதுச்சேரி மீனவ கிராம தலைவர்கள், பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். அமைப்பு நிறுவன தலைவர் மங்கையர் செல்வன் தலைமை தாங்கினார். மலையாளத்தான், தணிகாசலம், சக்திவேல், திருமுகம், வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர். இதில் ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால், தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தும் இலங்கை அரசுடன் அரசியல் உறவை, மத்திய அரசு முறித்து கொள்ள வேண்டும். இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும்.இதை வலியுறுத்தி தமிழக, புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை