உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை, வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவுகிற காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை 13ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.புதுச்சேரி பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மற்றவர்கள் புதுச்சேரி கடற்பகுதிகளில் மீன்பிடி தொழிலை பாதுகாப்பாக மேற்கொள்ளவும். இந்த வானிலை அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும். மீனவர்கள், தொடர்ந்து வானிலை எச்சரிக்கைகளை கவனித்து வருமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை