கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சி
திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக்கல்லுாரி என்.சி.சி., தரைப்படை பிரிவின் சார்பில், நாட்டுக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.கல்லுாரி வளாகத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில்சுற்றுலாத்துறை தலைவரும்,என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலருமான லெப்டிணன்ட் கதிர்வேல் வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கி, கொடிநாள் நிதி வழங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்று மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொடிநாள் நிதி வசூல் செய்தனர்.ஏற்பாடுகளை கல்லுாரி என்.சி.சி., அலுவலர்கதிர்வேல் மற்றும் தரைப்படை பிரிவு மாணவர்கள் செய்திருந்தனர்.