ஐயப்பன் கோவிலில்கொடியேற்று விழா
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஐயப்பன் கோவில், 21ம் ஆண்டு மகோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துங்கியது.கடலுார் சாலை, அரியாங்குப்பத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு 21ம் ஆண்டு மகோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கோவில் பிரகாரத்தில் உள்ள கன்னமூல கணபதி, மஞ்சமாதா, ஐயப்பன், பெரிய கருப்பன்னசாமி, சிறிய கருப்பன்னிசாமி, கருப்பாயி அம்மனுக்கு இன்று அபிேஷகம் நடக்கிறது.தொடர்ந்து, நாளை ஐயப்ப சாமி புலி வாகனத்தில் வீதியுலா, நாளை மறுநாள், நோணாங்குப்பம் சங்கராபரணி ஆற்றில், ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வான, 8ம் தேதி, காலை 10:30 மணிக்கு பால்குட ஊர்வலம் நடக்கிறது. பின், ஐயப்ப சாமிக்கு, பால், நெய் அபிேஷகம் நடக்கிறது.