கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி, சுப்பையா சாலை, ரயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் 73ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார, திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், ஏராளமானோர் பங்கேற்று, அரோகரா என கோஷமிட்டு, முருகனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இன்றும், நாளையும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. 25ம் தேதி, யானைமுகன் சம்ஹார நிகழ்ச்சியும், 26ம் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக 27ம் தேதி, சூரசம்ஹார விழா நடக்கிறது. மறுநாள், 28ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. வரும் 1ம் தேதி, வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம், 4ம் தேதி, முத்துப்பல்லக்கு, 7ம் தேதி, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.