உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விமான சேவை ரத்து பயணிகள் அவதி

 விமான சேவை ரத்து பயணிகள் அவதி

புதுச்சேரி: புதுச்சேரியில் பெங்களூரு - ஐதாரதாபாத் விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதியடைந்தனர். நாடு முழுதும் இண்டிகோ விமான சேவையில் நேற்று மட்டும் 400 விமானங்களின் சேவை திடீரென ரத்தானது. இதில், பெங்களூருவில் 100க்கும் மேற்பட்ட விமான சேவை மற்றும் ஐதராபாத்தில் 90 விமானங்களின் சேவை ரத்தும் அடங்கும். இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானம் நேற்று மதியம் ஒரு மணி நேரம் தாமதமாக 2:45க்கு வந்து புதுச்சேரியில் இருந்து 3:00 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு சென்றது. அதைதொடர்ந்து, பெங்களூருவில் இருந்து வழக்கம்போல் மாலை 5:00 மணிக்கு புதுச்சேரிக்கு வந்து ஐதராபாத் செல்லும் மற்றொரு விமான சேவை திடீரென ரத்தானது. விமான சேவை ரத்து குறித்து பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்ததால் பயணிகள் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வரவில்லை. சென்னை விமான நிலையம் மூலம் பெங்களூரு செல்வதற்கு பயணிகள் சென்றதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி