புதுச்சேரியில் இன்றும் விமான சேவை ரத்து
புதுச்சேரி: 'டிட்வா' புயல் காரணமாக, புதுச்சேரியில் இன்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து, மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணமாகவும், இன்று (30ம் தேதி) புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு இடையே இயங்கி வரும் இண்டிகோ விமான சேவை அனைத்தும், ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.