மேலும் செய்திகள்
ஆயுத பூஜை கொண்டாட்டம் பூக்கள் விலை கிடு கிடு
11-Oct-2024
புதுச்சேரி, : புதுச்சேரியில் தீபாவளியையொட்டி, பூக்களின் விலை பன்மடங்காக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தீபாவளி விற்பனை உச்சத்தை எட்டிய நிலையில், பிரதான சந்தைகளில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல பூக்களின் விலையும் கடந்த சில தினங்களாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து நேற்று பன்மடங்காக விற்பனையானது. கடந்த வாரம் வரை சாமந்தி ஒரு கிலோ, ரூ.120,க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை, 160 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கிலோ 200,க்கு விற்பனையான ரோஜா, 280 வரையும்; 120,க்கு விற்பனை செய்யப்பட்ட பன்னீர் ரோஜா, 200 வரையும் விற்பனையானது.முல்லை அரும்பு கடந்த வாரம் ஒரு கிலோ, ரூ.200,க்கு விற்பனையானது. தற்போது இதன் விலை பல மடங்கு உயர்ந்து, ரூ.1200,க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ, ரூ.600,க்கு விற்கப்பட்ட மல்லிகை ரூ.1,600, ஆக உயர்ந்துள்ளது.பூக்களின் விலை இன்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
11-Oct-2024