மேலும் செய்திகள்
என்னென்ன உணவு உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது?
01-Sep-2024
காரைக்கால்: திருநள்ளாறில் தரம் இல்லாமல் விற்கப்பட்ட பரிகார உணவை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நளன்குளம் பகுதியில் பரிகார உணவுகள் தரம் இல்லாமல் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. அதன்பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று நளன் குளம் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில் ஆய்வு செய்தனர். அதில், தரமில்லாத உணவு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 200க்கும் மேற்பட்ட பரிகார உணவு பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் நெடுங்காடு பகுதியில் குளிர்சாதன பெட்டியில் தரம் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பிரியாணி மற்றும் சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்த உணவுப் பொருட்களை அதிகாரிகள் அழித்தனர்.
01-Sep-2024