வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நரி தன் இருப்பை காட்ட கூவுகிறது?
மேலும் செய்திகள்
புதுச்சேரி திரும்பியவர்கள் முதல்வருக்கு நன்றி
16-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அரசு, ஒட்டு மொத்தமாக ஆட்சிப்பொறுப்பில் இருந்து வெளியேறினால் தான், மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் முதல்வராக ரங்கசாமி வந்தால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. வியாபாரிகளை மிரட்டி, மாமூல் வாங்கும் வேலை தொடர்ந்து நடக்கும். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் ரவுடிகள் மாமூல் வசூலிப்பதெல்லாம் தொடர்கதையாக உள்ளது. இதற்கெல்லாம் அரசியல் பின்னணி உள்ளது. போலீஸ் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து அலுவலகங்களாக செயல்பட்டு வருகின்றன.இதற்கு தார்மீக பொறுப்பேற்று, அந்த துறையின் அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ரங்கசாமி அரசு, ஒட்டு மொத்தமாக ஆட்சிப்பொறுப்பில் இருந்து வெளியேறினால் தான், மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். இதைக்கண்டித்து, காங்., சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நரி தன் இருப்பை காட்ட கூவுகிறது?
16-Oct-2024