உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருந்து ஊழலுக்கு மாஜி அமைச்சரே பொறுப்பு காங்., தலைவர் வைத்திலிங்கம்  பேட்டி

மருந்து ஊழலுக்கு மாஜி அமைச்சரே பொறுப்பு காங்., தலைவர் வைத்திலிங்கம்  பேட்டி

புதுச்சேரி: மல்லாடி கிருஷ்ணராவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zbee33f1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி பெயரில் தேர்தல் துறை நடத்தும் ஓட்டு திருட்டுக்கு எதிராக காங்., சார்பில், புதுச்சேரியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதில், 2.52 லட்சம் வாக்காளர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளோம். அதனை வரும் 12ம் தேதி டில்லி அனுப்ப உள்ளோம். புதுச்சேரியில் ஆயிரம் ஓட்டுகள்தான் வெற்றியை நிர்ணயிக்கும். பீகாரில் ஓட்டு போட்டவர்கள், இங்கு வந்து ஓட்டு போடவும், தாங்கள் வெற்றி பெறவும் பா.ஜ., - என்.ஆர்.காங்., அரசு முயற்சிக்கிறது. அதற்காக, மக்களை குழப்பி ஓட்டு திருட்டில் ஈடுபடவே சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை அவசரமாக மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தப்பணியை திரும்ப பெற வேண்டும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சத்து மருந்து வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊழலுக்கு அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பொறுப்பு ஏற்க வேண்டும். அப்போதைய முதல்வர் நாராயணசாமியும் விசாரணைக்கு தயார் என, கூறியுள்ளார். எனவே, மல்லாடி கிருஷ்ணாராவ் தற்போது அவர் வகித்து வரும் டில்லி பிரதிநிதி பதவியை ராஜினாமா செய்து விட்டு, விசாரணையை சந்திக்க வேண்டும்' என்றார்.பேட்டியின்போது, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை