உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாதயாத்திரையை நிறுத்திய மாஜி எம்.எல்.ஏ.,: காங்., அதிர்ச்சி

 பாதயாத்திரையை நிறுத்திய மாஜி எம்.எல்.ஏ.,: காங்., அதிர்ச்சி

புதுச்சேரி: நடை பயணத்தை தனது தொகுதியில் நடத்தாமல் நிறுத்திய மாஜி எம்.எல்.ஏ., வின் அதிருப்தியை சரி செய்ய முடியாமல் புதுச்சேரி காங்., தவித்து வருவது கட்சியினரிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி காங்., சார்பில், பாத யாத்திரை கடந்த ஜன., மாதம் துவங்கி பல தொகுதிகளில் நடந்தது. தேர்தலில் காங்., வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை குறி வைத்து இந்த பாதையாத்திரை நடத்தப்பட்டது. அந்தந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புவர்கள் இதற்கான செலவினை ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் நகரத்தின் அருகிலுள்ள 40 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியில் வெற்றி பெற முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் தீவிரமாக பணியாற்றி வந்தார். திடீர் என்ன காரணமோ தெரியாமல் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டார். இதனால் இந்த தொகுதியில் நடைபெற வேண்டிய பாதயாத்திரையும் இதுவரை நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டு விட்டது. மாஜியின் கோபத்திற்கு என்ன காரணம் என புரியாமல் கட்சித் தலைமையும், காங்., கட்சியினரும் புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ