கோவில் திருப்பணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., நிதி
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி 100 அடி சாலை ஜோதி நகரில் அமைந்துள்ள தாய் மூகாம்பிகை கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடந்து வருகிறது. இத்திருப்பணிக்காக, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தனது சொந்த செலவில் ரூ.1 லட்சம் நிதியுதவியை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். இதில், வேல்முருகன், மருதமலையப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந் தனர்.--