தலித் சமூகத்திற்கு அமைச்சர் பதவி முன்னாள் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புதுச்சேரி, : தலித் சமூகத்தினருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் 2வது அதிக மக்கள் தொகை கொண்ட தலித் சமுதாயத்தை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர். பின், பல்வேறு காரணங்களால் 2 தலித் அமைச்சர்களும், அமைச்சரவையில் இடம் பெறவில்லை.எந்த அரசாக இருந்தாலும், தலித் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில் தலித் சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., க்கள் அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பெற்று வந்தனர். தற்போது அமைச்சரவையில் தலித் சமுதாயத்தினர் யாரும் இடம்பெறவில்லை. இது அரசியலுக்கு அப்பாற்பட்டு அந்த சமுதாய மக்களிடம் ஆளும் அரசு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்து தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும். தொடர்ந்து, ஆட்சியாளர்கள் தலித் மக்களுக்கு எதிரான மனநிலை இருப்பது கண்டிக்கத்தக்கது. சரியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லை என்றால், வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் தங்களது பதிலை தெரிவிக்கும் சூழ்நிலை வரும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.