உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுபோதையில் ரகளை: நான்கு பேர் கைது

மதுபோதையில் ரகளை: நான்கு பேர் கைது

புதுச்சேரி: மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மூலகுளம் ஜான்குமார் நகர் பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முத்திரையர்பாளையம் ஏழுமலை,50; முத்தையன், 51; ஆகியோரை கைது செய்தனர். அதே போல், ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ரோந்து சென்றபொது, அப்பகுதியில் குடிபோதையில் ரகளை ஈடுபட்ட பிரியதர்ஷினி நகர் லோகபிரகாஷ்,22; என்பவரை கைது செய்தனர். பள்ளூர் போலீசார் நேற்று முன்தினம் சோக்லி பரல் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கேரளம், தலச்சேரி புதுசேரிபள்ளி பகுதியை சேர்ந்த ரினுாப்,36; என்பவ மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை