உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சி.பி.ஐ., விசாரணைக்கு அழைப்பதாக போலி ஆணை அனுப்பி மோசடி

சி.பி.ஐ., விசாரணைக்கு அழைப்பதாக போலி ஆணை அனுப்பி மோசடி

சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கைபுதுச்சேரி: சி.பி.ஐ., விசாரணைக்கு அழைப்பதாக போலியான ஆணை அனுப்பி மோசடி நடந்து வருவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.புதுச்சேரியில் தினசரி புது புது முறையில் சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறி வருகிறது. நன்கு படித்த பலரும் எளிதில் ஏமாந்து பணத்தை இழக்கின்றனர். தற்போது புது வித மோசடி அதிகமாக அரங்கேறி வருகிறது. வாட்ஸ்ஆப் காலில் வரும் மர்ம நபர்கள், நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதை பொருட்கள் இருந்தது. உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு மூலம் வெளிநாட்டிற்கு பணம் அனுப்பி மோசடி நடந்துள்ளது. அதனால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என, சி.பி.ஐ., அனுப்பியதுபோல் போலியான வழக்கு பதிவு செய்த ஆணை ஒன்றை அனுப்புகின்றனர்.அதில் புதுச்சேரி நபரின் பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சரியாக உள்ளது. இதை கண்டதும் பலரும் அதிர்ந்து என்ன செய்வது என தெரியாமல் திகைக்கின்றனர். வேறு வழியின்றி சி.பி.ஐ., அதிகாரிகள் என கூறும் நபரிடம், தன் மீது எந்த தவறும் இல்லை என முறையிடும்போது, மோசடி செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வங்கி கணக்கில் உள்ள பணத்தை தங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி நிருப்பிக்க கூறுகின்றனர். அதன்படி பலரும் பணத்தை அனுப்பி இழந்து வருகின்றனர். இதனால் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது என வரும் உத்தரவுகளை யாரும் நம்ப வேண்டாம், அவை அணைத்தும் போலியானது என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டாசு ஆர்டரில் மோசடி

தற்போது தீபாவளி சீசன் துவங்கி உள்ளது. ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வருகிறது. கடந்த ஆண்டு 78 நபர்கள் பட்டாசு ஆர்டர் கொடுத்து ஏமாந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 2 புகார்கள் வந்துள்ளது. எனவே, போலியான இணையதளத்தில் பணத்தை கட்டி இழக்க வேண்டாம் என, புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Pudhuvai Paiyan
அக் 12, 2024 07:43

எனக்கும் அழைப்பு வந்தது , CBI என்று சொல்லி 30 நிமிடம் பேசினார்கள் , சிபிஐ என்று Gmail மூலம் செய்தியும் ஆபிசர் போட்டோவும் அனுப்பினார்கள் , எனக்கு தெரிந்தவரை எந்த சிபிஐ யும் ஜிமெயில் உபயோகிக்க மாட்டார்கள் , எனவே அடுத்த கால் வந்ததும் அவர்களை திட்டினேன், உடனடியாக அழைப்பு துண்டிக்கப்பட்டது. உடனே 1930 க்கு அழைத்து விபரம் சொன்னபோது அவர்கள் நேரடியாக வந்து புகார் அளிக்க சொல்லி தட்டி கழித்துவிட்டார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை