உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரான்சில் வேலை என கூறி ரூ.1.96 லட்சம் மோசடி

பிரான்சில் வேலை என கூறி ரூ.1.96 லட்சம் மோசடி

புதுச்சேரி : புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 4 பேர் ரூ.3.07 லட்சம் இழந்துள்ளனர்.புதுச்சேரி, சண்முகாபுரத்தைச் சேர்ந்த நபர், ஆன்லைனில் பிரான்சில் வேலை வாய்ப்பு தொடர்பாக விளம்பரத்தை பார்த்துள்ளார். பிறகு, வாட்ஸ் ஆப் மூலம் அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, எதிர்முனையில் பேசிய நபர், பிரான்சில் வேலை உள்ளதாகவும், இதற்காக பணம் டிபாசிட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய அவர் மர்மநபருக்கு ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.வில்லியனுாரை சேர்ந்த நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து 65 ஆயிரம், கருவடிக்குப்பத்தை சேர்ந்த நபர் 42 ஆயிரம், சாரத்தை சேர்ந்த நபர் 4 ஆயிரத்து 300 என, மொத்தம் 4 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 300 ரூபாயை இழந்துள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !