உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் மேலாளரிடம் ரூ.39.28 லட்சம் மோசடி

தனியார் மேலாளரிடம் ரூ.39.28 லட்சம் மோசடி

தெலுங்கானா வாலிபர் கைதுபுதுச்சேரி: புதுச்சேரி, லாஸ்பேட்டை, சாந்தி நகரைச் சேர்ந்தவர் கோபி, 39; தனியார் நிறுவன மேலாளர். இவரை கடந்த ஜூலை மாதம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறினார்.இதை நம்பிய கோபி, மர்ம நபர் அனுப்பிய டெலிகிராம் லிங்க் மூலம், 18 வங்கி பரிவர்த்தனைகளில் ரூ. 39.25 லட்சம் முதலீடு செய்து, ஏமாந்தார். புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துவிசாரித்தனர். அதில், கோபியை ஏமாற்றியது தெலுங்கானா, வனசட்டலிபுரம், பிரசாந்த் நகர் காலனியை சேர்ந்த ரோகித் பரைடு, 26; என தெரியவந்தது. அவரை, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், ரோகித் பரைடு வங்கி கணக்கில் கடந்த ஓராண்டில் ரூ. 13 கோடி மோசடி பணம் பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. ரோகித் பரைடுவை, தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ