உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேக்கரி உரிமையாளரிடம் ரூ.4.36 லட்சம் மோசடி

பேக்கரி உரிமையாளரிடம் ரூ.4.36 லட்சம் மோசடி

புதுச்சேரி: பேக்கரி உரிமையாளரிடம் ரூ. 4.36 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, சாரம் சத்யா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 48; பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு 10:00 மணியளவில் இவரது மொபைல் போனில் சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தின் லிங்கை கை தவறி தொட்டுள்ளார். பின் போனை வைத்துவிட்டு துாங்கினார். 24ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 4 லட்சத்து 36 ஆயிரத்து 435 ரூபாய் எடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து ரமேஷ் உருளையான்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ