உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கம்பெனி ஊழியரிடம் ரூ.1 லட்சம் மோசடி

கம்பெனி ஊழியரிடம் ரூ.1 லட்சம் மோசடி

புதுச்சேரி: கொம்பாக்கத்தை சேர்ந்தவர் ரகோத்தமன் மகன் ருத்ரமோகன்,27; தனியார் கம்பெனி ஊழியர். இவரை கடந்த 29ம் தேதி தொடர்பு கொண்ட மர்மநபர், வங்கி அதிகாரி போல் பேசி புதிய ஏ.டி.எம்., கார்டு வழங்க உள்ளதாக கூறி ஓ.டி.பி., கேட்டுள்ளார். அதை நம்பிய அவர் தனது வங்கி விவரங்கள் மற்றும் ஓ.டி.பி.,யை தெரிவித்தார். அதன்பின், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சம் பணம் மோசடியாக எடுக்கப்பட்டது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த ருத்ரமோகன் முதலியார்பேடடை போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை