உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரத்தம் கொடுப்பதாக மோசடி புதுச்சேரியில் துணிகரம்

ரத்தம் கொடுப்பதாக மோசடி புதுச்சேரியில் துணிகரம்

புதுச்சேரி : நோயாளிக்கு ரத்தம் கொடுக்க வருவதாக கூறி, நுாதன மோசடியில் ஈடுபட்ட மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.ரெயின்போ நகரை சேர்ந்த ஆண் நபர், பேஸ்புக்கில் சமையல் வேலைக்கு ஆட்கள் உள்ளதாக வந்த விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் கொல்கத்தாவில் இருந்து பேசுவதாகவும், ஆட்களை வேலைக்கு அனுப்ப பயண செலவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அனுப்பும்படி கூறியுள்ளார். இதைநம்பி 5 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.மூர்த்தி புதுக்குப்பத்தை சேர்ந்த நபர், ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து, 44 ஆயிரம் ரூபாய்க்கு என்பீல்டு பைக் ஆர்டர் செய்தார். இதுவரை பைக் வீட்டிற்கு வரவில்லை.வில்லியனுாரை சேர்ந்த நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு ரத்தம் தேவை என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவரை தொடர்பு கொண்ட நபர் மயிலம் பகுதியில் இருந்து 4 நபர் ரத்தம் கொடுக்க வருவதாகவும், பெட்ரோல் செலவுக்கு பணம் அனுப்பும்படி கூறியுள்ளனர்.இதைநம்பி, 500 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.லாஸ்பேட்டையை சேர்ந்த நபர் 88 ஆயிரத்து 500, மற்றொரு நபர் 6 ஆயிரத்து 998, கோர்காட்டை சேர்ந்த நபர் ஆயிரத்து 288, வில்லியனுாரை சேர்ந்த பெண் 55 ஆயிரம் என, 7 பேர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து ஆயிரத்து 286 ரூபாய் ஏமாந்தனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை