உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கட்டணம் கட்டாத கோமாளி திருவிழா: கம்பன் கலையரங்கிற்கு பூட்டு; புதுச்சேரி நகராட்சி அதிரடி

கட்டணம் கட்டாத கோமாளி திருவிழா: கம்பன் கலையரங்கிற்கு பூட்டு; புதுச்சேரி நகராட்சி அதிரடி

புதுச்சேரியைச் சேர்ந்த தனியர் இவன்ட் மேனேஜ்மன்ட் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் கிளப்புகளுடன் இணைந்து, நேற்று முன்தினம் மாலை கம்பன் கலையரங்கில் சர்வதேச கோமாளிகள் திருவிழா - 2024க்கு ஏற்பாடு செய்திருந்தது. விழாவை காண 750 இருக்கைகள் கொண்ட கம்பன் கலையரங்கு டிக்கெட்டுகள், ஆன்லைன் மூலம் ஒரு டிக்கெட் (சில்வர்) விலை ரூ. 750 மற்றும் (கோல்டு) ரூ. 1000க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியை காண டிக்கெட் வாங்கிய பொதுமக்கள் கலையரங்கின் முன்பு குவிந்தனர். மாலை 6:00 மணியை தாண்டியும் கலையரங்கு கதவுகள் திறக்கப்படவில்லை. இது குறித்து விசாரித்தபோது, நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனத்தினர் சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கலையரங்கை குறைந்த வாடகை ரூ. 40 ஆயிரத்திற்கு புக் செய்து அந்த தொகையும் செலுத்தாமல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.இதை அறிந்த புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, குறைந்த வாடகைக்கு புக் செய்து விட்டு டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளீர்கள். அதனால் டிக்கெட் விற்பனையில் நகராட்சியின் பொழுதுபோக்கு வரியை செலுத்தினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கறாராக தெரிவித்து விட்டார்.கலையரங்கு வாடகை மற்றும் டிக்கெட்டிற்கான பொழுதுபோக்கு வரி சேர்த்து மொத்தம் ரூ. 1.30 லட்சம் செலுத்திய பின்பே கம்பன் கலையரங்கு கதவுகள் திறக்கப்பட்டது. அதன் பின்பு கோமாளிகள் நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ