உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச கண் கண்ணாடி வழங்கல்

இலவச கண் கண்ணாடி வழங்கல்

புதுச்சேரி : பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச கண் கண்ணாடியை செல்வகணபதி எம்.பி., நேற்று வழங்கினார். பிரதமர் மோடியின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, ராஜ்யசபா எம்.பி., ஏற்பாட்டில் ஜோதி கண் மருத்துவமனை மூலம் லாஸ்பேட்டை தொகுதி முழுதும் பல்வேறு இடங்களில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அதில், பரிசோதனைகளின் முடிவில் கண் கண்ணாடிகள் தேவை படுவோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் விழா, லாஸ்பேட்டை, அரசு ஊழியர்கள் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு, செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கி, 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார். இதில், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பா,ஜ., பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை