இலவச லேப்டாப் வழங்கல்
பாகூர்: கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2022-23ம் ஆண்டு பிளஸ் 2 படித்த 76 மாணவர்களுக்கும், 2025--26 கல்வியாண்டில், 11ம் வகுப்பு படிக்கும் 75 மாணவர்களுக்கும், ' கல்விதுறை சார்பில் லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் கருணாகரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியர் அனிதா, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.