மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
23-May-2025
அரியாங்குப்பம், : மணவெளி புருேஷாத்தமன் சமுதாய நலக்கூடத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.புதுச்சேரி கிளை ராமகிருஷ்ண மடம், புதுச்சேரி யூனியன் பிரதேச சமூகநல சொசைட்டி இணைந்து அரியாங்குப்பம் அடுத்த மணவெளி புருேஷாத்தமன் சமுதாய நலக்கூடத்தில் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தியது. இதய நல சிறப்பு மருத்துவர் சவுத்ரி, மருத்துவர்கள் நேரு, நந்தினி ஆகியோர், மருத்துவ பரிசோதனை செய்து, இதய நோய், நீரிழிவு நோய், குடல்நோய், மூட்டு வலி உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில், ராமருகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளர் நித்யேஷானந்தர், புதுச்சேரி யூனியன் பிரதேச சமூகநல சொசைட்டி, நிர்வாகிகள் அசோக்ராஜ், காத்தவராயன், மதிஒளி, சபாபதி, பச்சையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
23-May-2025