உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காட்டேரிக்குப்பத்தில் இலவச அரிசி, சர்க்கரை வழங்கல்

காட்டேரிக்குப்பத்தில் இலவச அரிசி, சர்க்கரை வழங்கல்

திருக்கனுார், : மண்ணாடிப்பட்டு தொகுதியில் இலவச அரிசி மற்றும் சர்க்கரையை அமைச்சர் நமச்சிவாயம் பொதுமக்களுக்கு வழங்கினார்.புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பொதுமக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரையை நேற்று வழங்கினார்.இதில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., நிர்வாகிகள் சிவக்குமார், மஞ்ஜினி, சுரேஷ், ஊமத்துரை, திருமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, லிங்காரெட்டிப்பாளையம், சுத்துக்கேணி, சந்தை புதுக்குப்பம், குமாரப்பாளையம், கொடாதுார், கே.ஆர்.பாளையம், மணலிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இலவச அரிசி மற்றும் சர்க்கரையை அமைச்சர் நமச்சிவாயம் பொதுமக்களுக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி