உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆராய்ச்சிக்குப்பம் - பாகூர் இடையே இலவச வாகன சேவை இயக்கம்

ஆராய்ச்சிக்குப்பம் - பாகூர் இடையே இலவச வாகன சேவை இயக்கம்

பாகூர் : பொது மக்களின் நலன் கருதி, ஆராய்ச்சிக்குப்பம் முதல் பாகூர் வரை தற்காலிக இலவச வாகன சேவையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பாகூர் தொகுதி, ஆராய்ச்சிக்குப்பம் கிராமத்தில் இருந்து கொம்மந்தான்மேடு, பரிக்கல்பட்டு, பாகூர், வழியாக புதுச்சேரிக்கு 17ஏ என்ற பி.ஆர்.டி.சி., பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் போக்குவரத்து பழுது மற்றும் விழுப்புரம் - நாகை புறவழிச் சாலை பணியால் 4 ஆண்டுகளாக தடைபட்டது. பஸ் வசதி கேட்டு, அப்பகுதி மக்கள், கோரிக்கை விடுத்தனர். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியால், பரிக்கல்பட்டு - பாகூர் வரை பி.ஆர்.டி.சி., சார்பில், மினி பஸ் இயக்கப்பட்டது. அதுற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்நிலையில், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், கொம்மந்தான்மேடு கிராம மக்கள் பயன்பெரும் வகையில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில், தற்காலிக இலவச வாகன சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆராய்ச்சிக்குப்பம் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்பகுதிக்கு நிரந்தரமாக பி.ஆர்.டி.சி., பஸ்சை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி