உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.எஸ்., மடுகரை பஸ் நிறுத்தம் அருகில் 2 ஆயிரம் மனைப்பிரிவுகளுடன் பிரெஞ்சு  சிட்டி  துவக்கம்

பி.எஸ்., மடுகரை பஸ் நிறுத்தம் அருகில் 2 ஆயிரம் மனைப்பிரிவுகளுடன் பிரெஞ்சு  சிட்டி  துவக்கம்

புதுச்சேரி: மடுகரை பஸ் நிறுத்தம் அருகில் தாய் குரூப்ஸ், எஸ்.ஆர்.புரோமோட்டஸ், ஸ்ரீ பாலாஜி ரியல் எஸ்டேட்ஸ் மூலம் மோட்சக்குளத்தில் 2 ஆயிரம் மனைப்பிரிவுகளுடன் அமைக்கப்ப்டடுள்ள பிரெஞ்சு சிட்டி துவக்க விழா நேற்று நடந்தது.தமிழகத்தின் பல் வேறு இடங்களில் தாய் குரூப்ஸ், எஸ்.ஆர்., பிர மோட்டார்ஸ், ஸ்ரீ பாலாஜி ரியல் எஸ்டேட் ஆகியவை இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் முத்திரை பதித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மடுகரை பஸ் நிலையம் அருகில், சிறுவந்தாடு செல்லும் சாலையில், 2 ஆயிரம் புதிய மனைப் பிரிவுகளுடன் ஸ்மார்ட் சிட்டியை மிஞ்சும் அளவிற்கு, 'பிரெஞ்சு சிட்டி' அமைத்துள்ளனர். இங்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் முதல் மனைப்பிரிவுகள் விற்பனைக்கு உள்ளது. இந்த மனைப்பிரிவில், 60 அடி, 40 அடி, 33 அடி அகலமான தார்சாலை, ஒவ்வொரு மனைக்கும் தனித்தனி குடிநீர் வசதிகளும், மும்முனை மின்சார வசதி, தெரு மின் விளக்கு வசதி கள் உள்ளது. பொதுமக்கள் உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப் பட்டுள்ளது. மனைப்பிரிவுகள் அனைத்தும் டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற்றுள்ளது. மனைகளை வாங்கும் வாடிக்கையாளர்க ளுக்கு பத்திரப்பதிவு, தனிப்பட்டா இலவசம். நேற்று நடந்த பிரெஞ்சு சிட்டி துவக்க விழாவில், ஊராட்சி மன்றத் தலைவர் கனகராஜ், பெரம்பலுார் எஸ்.பி.டி.அன்ட் கோ செந்தில்குமார், கடலுார் ஜோதி, பண்ருட்டி தொழிலதிபர் முருகவேல். துபாய் தொழிலதிபர் கோதண்டராமன். கும்பகோணம் ராதாகிருஷ்ணன், வெங்கடேசன், விக்ரமன், விருத்தாசலம் ரியல் எஸ்டேட் அதிபர் ஹனி, கடலூர் வெங்கடாஜலபதி, புதுச்சேரி தனசேகர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, தாய் குரூப்ஸ் அலெக்ஸ், வசந்த், சவுமிய நாராயணன், பாலாஜி. சம்பத், பால வசந்த், சுதர்சன், கிருஷ்ணன், முருகேசன், அசோக்குமார், ரவிச்சந்திரன், விஜயன், சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.விழாவில், 74 நபர்களுக்கு சலுகை விலையிலான வீட்டுமனைகள் குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை