உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரான்ஸ் விடுதலை தினம் கடற்கரையில் கொண்டாட்டம்

பிரான்ஸ் விடுதலை தினம் கடற்கரையில் கொண்டாட்டம்

புதுச்சேரி : பிரான்ஸ் நாட்டின் மன்னராட்சி முறையானது, கடந்த 1789ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி முடிவுக்கு வந்ததையடுத்து, அங்கு மக்களாட்சி உருவானது.அப்போது அங்கு மின்சாரம் இல்லாத சூழ்நிலையால், பொதுமக்கள் அனைவரும், தங்களது கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி புரட்சி செய்து, இந்த வெற்றியை பெற்றதாக கூறப்படுகின்றது.இந்நிகழ்ச்சியை நினைவுக்கூறும் வகையில், பிரெஞ்சு தேசிய தினமானது, பிரான்ஸ் நாட்டிலும், பிரெஞ்சு காலனி நாடுகளிலும் ஆண்டுதோறும் பிரெஞ்சு கொடியேற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பிரெஞ்சு விடுதலை தின விழா பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியிலும் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு வான வேடிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை