உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எப்.எஸ்.டி.ஏ., பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

எப்.எஸ்.டி.ஏ., பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

திருபுவனை : திருபுவனை எப்.எஸ்.டி.ஏ., மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகி ஜெயவேல், முதல்வர் ஒயிட்தாசன் ஆகியோர் கூறியதாவது; எமது பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் 30 பேரும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவி மதுவந்தி 485 மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்றார்.ரித்திஸ்வரன் 467 பெற்று இரண்டாமும், யுவராஜ் 464 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுகளிலும் 100 சதவீதம் தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளியில் கிராமப்புற ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் நகர்புற பள்ளிகளுக்கு இணையான தரமான கல்வியை போதித்து வருகிறோம். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடித்துச் செல்லும் மாணவ-மாணவிகள் எவ்விதமான சிறப்பு பயிற்சியும் பெறாமலேயே நீட்,., ஜெ.இ.இ., உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று, உயர்கல்வி பயின்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் தொடர் வெற்றிக்கு உழைத்த ஆசிரிய பெருமக்கள், ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ