உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி இறந்த மாணவர் குடும்பத்திற்கு நிதி

மின்சாரம் தாக்கி இறந்த மாணவர் குடும்பத்திற்கு நிதி

திருக்கனுார் : காட்டேரிக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி இறந்த மாணவர் குடும்பத்திற்கு, மத்திய அரசு சார்பில், ரூ. 10 லட்சம் நிதியுதவியை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.மண்ணாடிப்பட்டு தொகுதி, காட்டேரிக்குப்பம், ராஜாங்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அரவிந்த் 17; பிளஸ் 1 படித்தார். இவர், கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி வீட்டில் பழுதடைந்து கிடந்த ரேடியோவை சரிசெய்யும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதையடுத்து, மத்திய அரசின் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி திட்டத்தின் கீழ், அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று வழங்கினார். பா.ஜ., நிர்வாகிகள் வீரராகவன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி