உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு போட்டி பரிசளிப்பு

விளையாட்டு போட்டி பரிசளிப்பு

புதுச்சேரி: குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்போ் சங்கம் சார்பில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.வில்லியனுார் கொம்யூன் குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி லேகசி சார்பில், தை மாதத்தை முன்னிட்டு கோலம் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தப்பட்டன.போட்டி பரிசளிப்பு விழாவிற்கு, ஆசிரியர் சிவசுப்ரமணியன் வரவேற்றார். குடியிருப்போர் சங்க கவுரவ தலைவர் ராஜாராம், ஆசிரியர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் ரமேஷ் முருகவேல் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன் நோக்கவுரை ஆற்றினார். ரோட்டரி கிளப் லேகசி தலைவர் கருணாநிதி, செயலர் பழனி, பொருளாளர் ரகுவரன் ஆகியோர், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.]சங்க பொருளாளர் ரகுராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ