உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா துவக்கம்

கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா துவக்கம்

புதுச்சேரி: சாரம் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. புதுச்சேரி, சாரம் முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா வரும் 10ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, நேற்று (9ம் தேதி) மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத் சங்கிரஹணம் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று( 10ம் தேதி) காலை 7:00 மணிக்கு அபிஷேகம் மற்றும் விக்னேஸ்வர பூஜை, காலை 10:30 மணிக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பம், இரவு 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாரதனையுடன் சுவாமி அன்ன வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 15ம் தேதி காலை 6:00 மணிக்கு அபிேஷகம், சகஸ்ரநாம அர்ச்சனையுடன் தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு யாகசாலை, மகா பூர்ணாஹூதி, இரவு 7:00 மணிக்கு சக்திவேல் வாங்குதல், ஆட்டு கிடா வாகனத்தில் சூரசம்ஹாரம், இரவு 9:30 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வரும் 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சமும், 18ம் தேதி காலை 8:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், இரவு 7:00 மணிக்கு கோவில் குளத்தில் தெப்பல் உற்சவம், 19ம் தேதி இரவு 8:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும், 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை