உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

புதுச்சேரி: கடற்கரை சாலையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடற்கரை சாலையில் கஞ்சா விற்பதாக, நேற்று முன்தினம் இரவு ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார், அப்பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு நின்ற வாலிபரை சந்தேகத்தின் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது. அவர், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்குளத்துாரை சேர்ந்த பிரவீன்குமார், 24; என, தெரியவந்தது. அவர் மீது ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை