உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாலின சமத்துவ விழிப்புணர்வு

 பாலின சமத்துவ விழிப்புணர்வு

நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் பஞ்சாயத்து மகளிர் கூட்டமைப்பு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சூரமங்கலத்தில் நடந்தது. ஊர்வலத்தில், 50க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு, பாலின சமத்துவம் குறித்தும், பெண்களுக்கு எதிரான பாலின விழிப்புணர்வு அடங்கிய பாததைகள் ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் சூரமங்கலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சூரமங்கலம் பகுதியை வந்தடைந்தது. தொடர்ந்து பாலின சமத்துவம் குறித்து மகளிர்கள் உறுதிமொழி எடுத்தனர். பாலின சமத்துவம் குறித்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். ஏற்பாடுகளை ஜென்டர் மேலாளர் உதயா, கிராம சேவக் செந்திலரசு, மலர்கொடி, சிவகங்கை, ரம்யாதேவி, திலகவதி, லட்சுமி, ரங்கலட்சுமி, வசந்தா, விமலாதேவி, புவனா, மாரிமுத்து, சிவகாமி, சரண்யா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை