உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலின சமத்துவ கருத்தரங்கம்

பாலின சமத்துவ கருத்தரங்கம்

புதுச்சேரி : புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், பணியிடங்களில் பாலின சமத்துவம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில், கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் நிஷா சர்மா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வழக்கறிஞர் மேரி அன்னா தயாவதி பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விளக்கினார். காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு நிறுவன ஆங்கில பேராசிரியர் ஜோஸ்பின் அருணா 'பாலின சமத்துவம் அடைவதற்கு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். இக்கருத்தரங்கில், 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கல்லுாரியின் உள்தர மதிப்பீட்டு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கல்லுாரியின் சட்ட சேவைகள் மைய தலைவர் ஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை