மேலும் செய்திகள்
கலை விழா
17-Feb-2025
புதுச்சேரி : பொறியியல் கல்லுாரி மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் தெய்வசிகாமணி, 18; மதகடிப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாியில் பி.டெக்., முதலாமாண்டு படித்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-Feb-2025