மேலும் செய்திகள்
அதிரடி Half century Rishabh pant அசத்தல்
25-Jul-2025
புதுச்சேரி: புதுச்சேரி, உப்பளம் துறைமுகம் வளாகத்தில், தினமலர் நாளிதழ் மற்றும் டார்லிங் இணைந்து, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை வரும் 8ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரையில் நடத்துகிறது.கண்காட்சியில் மங்கையர் மனங்கவரும் அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், அனைத்து தரப்பினரையும் வசீகரிக்கும் விதவிதமான உணவு வகைகள் என, அசத்தலான அரங்குகள் தயாராகி வருகின்றன.ஒரே இடத்தில் அனைத்து விதமான பொருட்களையும், குடும்பத்துடன் குதுாகலமாக ஷாப்பிங் செய்து விரும்பியதை வாங்கும் அரிய வாய்ப்பு, இந்த கண்காட்சி மூலம் ஆண்டிற்கு ஒருமுறை தான் கிடைக்கும். அதிரடி சலுகை விலையில், உங்கள் இல்லத்திற்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களான பர்னிச்சர்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பரிசு பொருட்கள், அலங்கார பொருள், அழகு சாதனங்கள் என, அனைத்து வகை பொருட்களின் அரங்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.குடும்பத் தலைவிகளே 'குளு குளு' ஸ்டால்களில் ஷாப்பிங் செய்து மகிழ இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது காத்திருங்கள்.
உணவு பிரியர்களுக்காகவே, 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவில் புட்கோர்ட் அமைக்கப்படுகிறது. இங்கு திண்டுக்கல் வேணு பிரியாணி, கும்பகோணம் டிகிரி காபி, நம்ம பருத்தி பால், ராபிட் வாலா, பாம்பே சாட்ஸ், மதுரை பன் பரோட்டா, பான் பான் ஐஸ்கிரீம்ஸ், பர்கர் அண்டு சான்விச், தீப் கமலி சிக்கன் விங்க்ஸ், கிராமத்து உணவு, ஆந்திரா உணவுகள், பீட்சா ஹட், ஜூஸ் என பல வகையான உணவு அரங்கங்கள் அமைக்கப்படுகிறது. ஷாப்பிங் செய்து களைப்பை போக்க, புட் கோர்ட்டுக்குள் புகுந்து, கமகமக்கும் வகை வகையான உணவை ருசிக்கலாம், மகிழலாம். இடம் உப்பளம் துறைமுக மைதானம், புதுச்சேரி நாள் ஆகஸ்ட் 8. 9, 10, 11 தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையில்,கண்காட்சியில் குளு குளு அரங்கில் குடும்பத்துடன் அசத்தலாக ஷாப்பிங் செய்து மகிழலாம்.
25-Jul-2025