கோலப்போட்டி பரிசளிப்பு விழா
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட, உழவர்கரை வயல்வெளி நகர், நண்பர்கள் நகர், தியாகுபிள்ளை நகர், புதுநகர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு கோலப்போட்டி நடந்தது. இப்போட்டியில் அப்பகுதிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோலம் போட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு, பா.ஜ., மாநில செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை பா.ஜ., மாநில செயலாளர் சரவணன் செய்திருந்தார்.