பொன்வண்டு இல்ல திருமண விழா
புதுச்சேரி: சென்னையில் நடந்த, பொன்வண்டு இல்லத் திருமண விழாவில், மணமக்களை உறவினர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.பொன்வண்டு, இல்லத் திருமண விழா, சென்னை நீலங்கரையில் உள்ள ஆர்.கே., கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது. மணமக்கள் மிரித்திகா சோனாலி -ஆனந்த் ஆகியோரை, மணமகளின் பெற்றோரும், தமிழ்நாடு சிறுதொழில் சோப்பு உற்பத்தியாளர் சங்க தலைவருமான, சரவணன் - உமா, மணமகனின் பெற்றோர் லட்சுமி நரசிம்மன் - லட்சுமி பிரபா ஆகியோர் வாழ்த்தினர்.இந்த திருமண விழாவில், சிறப்பு விருந்தினராக, நாகலாந்து கவர்னர் கணேசன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பவர் சோப் தனபால், முன்னாள் கவர்னர் தமிழிசை, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி, ராஜசேகர், மாரிமுத்து, பழனி வேல், மேலாளர் தம்பிராஜ், மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் வர்த்தக பிரமுகர்கள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.