உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நல்லாட்சி வார நிறைவு விழா 

நல்லாட்சி வார நிறைவு விழா 

புதுச்சேரி: வில்லியனுார் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் சார்பில் நல்லாட்சி வார நிறைவு விழா நடந்தது.குருமாபேட் சமுதாய நலக்கூடத்தில் நடந்த விழாவிற்கு, குழந்தைகள் மேம்பாட்டு நல அதிகாரி பாலாஜி தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் சாலமன் சவரிராஜ், நல அதிகாரி சத்யபிரியா, ஆய்வாளர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். விழாவில், பி.எம்.எம்.வி.ஒய் (பிரதான் மந்திரி மாத்திரை வந்தனா யோஜனா), பெண் குழந்தைகளுக்கான முதல்வரின் ரூ.50,000 திட்டம், அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி