உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து தொழிலாளர்கள் நலன் காக்க அரசு நடவடிக்கை

போக்குவரத்து தொழிலாளர்கள் நலன் காக்க அரசு நடவடிக்கை

புதுச்சேரி: தொழிலாளர் சட்டங்களை பின்பற்றுமாறு மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் துறை செயலர் செய்திக்குறிப்பு: அரசின் தொழிலாளர் துறை, மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க, மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம், 1961, மற்றும் புதுச்சேரி மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் விதிகள், 1965யை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, தொழிலாளர்களை பணியமர்த்தும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கூரியர் நிறுவனங்கள் மற்றும் தனியார் வாகன நிறுவனங்கள், தலைமை ஆய்வாளர், ஆய்வாளரிடம் தங்கள் நிறுவனத்தை இதுவரை பதிவு செய்யாதது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்த சில நிறுவனங்கள், அந்த பதிவை புதுப்பிக்கவில்லை. மேற்கூறிய சட்டம் மற்றும் விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க, அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் உடனடியாக htt ps://labour.py.gov.inஎன்ற இணையதளம் மூலம் தங்கள் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களை பதிய மற்றும் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !