அரசு கிளை நுாலகம் திறப்பு விழா
நெட்டப்பாக்கம்: புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், பண்டசோழநல்லுார் கிாமத்தில் அரசு கிளை நுாலகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் சக்திவேல் தலைமை தாங்கினார். துறை கண்காணிப்பாளர் விலா கலிபா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு கிளை நுாலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், கொம்யூன் அதிகாரி பிரபாகரன், கிராம பஞ்., தலைவர்கள் சிவக்குமார், ஜெயபால், முருகன், முத்தலாம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஸ்வநாதன், கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி நுாலகர் கலியமூர்த்தி, மணிகண்டன், ஜெயராமன், பழனி, விநாயகம், ஆதிநாராயணன், கொலம்பஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.