மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
24-Nov-2024
புதுச்சேரி: அரசு ஊழியர் சம்மேளன 50ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ஊர்வலம் நடந்தது.புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் 50-வது ஆண்டு துவக்கவிழாவையொட்டி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காலை 7:00 மணிக்கு சம்மேளன அலுவலகத்தில் ஆலோசகர் ஆனந்த கணபதி தலைமையில் சங்க கொடியேற்றப்பட்டது. முன்னாள் செயலவை உறுப்பினர் உதயகுமார் கொடியேற்றி வைத்தார்.தொடர்ந்து, ஜே.வி.எஸ்., நகர் தோட்டக்கால் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாலை 4:00 மணிக்கு பெரியார் சிலையில் இருந்து 50வது ஆண்டு துவக்க விழா ஊர்வலம் துவங்கியது. முன்னாள் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் செல்வம் துவக்கி வைத்தார். ஆலோசகர் ஞானசேகர், துணை பொது செயலாளர் பச்சையப்பன், செயலாளர் பாஸ்கரன், செயலாளர் அய்யனார் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
24-Nov-2024